தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மீண்டும் வருகிறார் யுவராஜ் சிங்! உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

yuvaraj will play in T20

yuvaraj will play in T20 Advertisement


இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வீரர் யுவராஜ் சிங் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என அறிவித்தது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்திய அணியின் சிறந்த ஆல் ரவுண்டர், அதிரடி ஆட்டக்காரர் என இந்திய அணியின் முக்கியமான வீரராக இருந்தார் யுவராஜ் சிங். 

2000-ம் ஆண்டில் இந்திய அணியில் ஒருநாள் போட்டிக்காக அறிமுகமானவர் யுவ்ராஜ் சிங். இவர், ஒரே ஓவரில் 6 பந்துகளுக்கு 6 சிக்சர்கள் அடித்து உலகத்தையே திரும்பி பார்க்கவைத்தார். பல போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாகவும் யுவராஜ் இருந்துள்ளார். இந்தநிலையில், இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவதாக அறிவிப்பை வெளியிட்டார்.

Yuvaraj singh

இந்தநிலையில் கனடா நாட்டில் நடைபெறும் டி20 போட்டியில் தற்போது யுவராஜ் சிங்  டொராண்டோ நேஷனல் அணிக்கு ஆடுகிறார்.  6 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் ஒவ்வொரு அணியிலும் தலா நான்கு கனடா வீரர்களும் இடம் பெறுவார்கள். இந்த தொடரின் இரண்டாவது சீசன் அடுத்த மாதம் 25ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடக்கிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Yuvaraj singh #t20
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story