சம்பளம் வேண்டாம்! கிரிக்கெட் விளையாட விடுங்கள் கதறும் மூத்த கிரிக்கெட் வீரர்!
Zimbabwe player request to allow play
ஜிம்பாபே அணியில் நடைபெற்ற அரசியல் தலையீடு மற்றும் ஊழல் காரணமாக சில வாரங்களுக்கு முன்பு ஐசிசி ஜிம்பாபே அணிக்கு தடை விதித்தது. மேலும், ஐசிசி வழங்கும் அணைத்து விதமான சலுகைகளும், நிதியும் நிறுத்தப்படுவதாகவும், ஐசிசி நடத்தும் எந்த ஒரு தொடரிலும் ஜிம்பாபே அணி பங்கேற்க முடியாது என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், இரு நாடுகளுக்கு இடையேயான ஆட்டத்தில் அந்த அணி பங்கேற்பதில் எந்த தடையும் இல்லை என ஐசிசி கூறியிருந்தது. இந்நிலையில் எங்களுக்கு சம்பளமே வேன்டும், ஆனால், தயவு செய்து எங்களை விளையாட விடுங்கள் என ஜிம்பாபே அணியணி மூத்த வீரர் ஒருவர் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுள்ளார்.
இதுபற்றி கூறிய அவர் ஏற்கனவே வங்கதேச அணியுடன் விளையாடிய ஆட்டத்திற்கு இதுவரை சம்பளம் வரவில்லை என்றும், ஐசிசி யிடம் இறுத்து நிதிஉதவி வரும்போது இரண்டு மாதம் சம்பளம் பாக்கி இருந்தததாகவும், இனி அந்த சம்பளம் வருமா என்று கூட தெரியவில்லை.
எங்களுக்கு சம்பளம் தராவிட்டாலும் பரவாயில்லை ஆனால், எங்களை விளையாடவிடுங்கள் என அந்த அணியின் வீரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.