உங்களின் வீட்டில் இந்த அறிகுறிகள் இருக்கின்றனவா? - வீட்டில் பில்லி, சூனியம் இருப்பதற்கான சாட்சி இவைதான்.!
உங்களின் வீட்டில் இந்த அறிகுறிகள் இருக்கின்றனவா? - வீட்டில் பில்லி, சூனியம் இருப்பதற்கான சாட்சி இவைதான்.!
என்னதான் உலகம் விஞ்ஞானமயமாகிவிட்டாலும் ஆன்மிகம், பேய்கள், பில்லி, சூனியம்-ஏவல் போன்ற விஷயங்கள் குறித்த மர்மங்களும் உலாவி வருகின்றன. இதில் ஏலியன், ஏலியன்கள்தான் கடவுள்களா? என்ற தகராறு வேறு ஏற்படுகிறது.
இந்நிலையில், சென்னையை சேர்ந்த மாந்த்ரீகவாதியாக கருதப்படும் ரஜினி அம்மா, முன்பு பில்லி-சூனிய ஏவல்கள் தொடர்பாக சில ஆன்மீக குறிப்புகளுடன் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து இருந்தார்.
அந்த பேட்டியில், வீட்டு வாசலில் நிலைவாசலையொட்டி கண்ணாடி வைப்பது, துஷ்ட தேவதை வீட்டிற்கு வந்தாலும் விரட்டிவிடும். கருவண்டு வீட்டை சுற்றினால், செய்வினை வரப்போகிறது என அர்த்தம். கருவண்டு வீட்டிற்குள் வந்துவிட்டால் செய்வினை வீட்டிற்குள் வந்துவிட்டது என பொருள்.
ஆந்தை வீட்டை பார்த்து கத்தகூடாது. வௌவால் நமது வீட்டிற்குள் வரக்கூடாது. வௌவாலிலும் ஏவல் வைத்து அனுப்புவார்கள். கருந்தேள் தொடையில் விழுந்தால் பெரும் ஆபத்து. நமது வீட்டில் இருக்கும் செல்லப்பிராணிகள், நமக்கு வரும் ஆபத்தை எதிர்கொண்டு தனது உயிரை தரும்.
கன்னிப்பெண்கள் நிறைவேறாத ஆசையுடன் உயிரிழந்தான் மோகினியாக இருப்பார்கள். இவர்கள் பெண், மோகினி, சின்னப்பெண் ஆகிய உருவம் கொண்டு இருப்பார்கள். மோகினி ஆணை பிடித்துவிட்டால் ஆண்மையை உரிந்து எடுத்துவிடும். பிடாரி தினமும் இரத்தத்தை உறிஞ்சும்.