வெள்ளிக்கிழமையில் இதை செய்தால் கடனாளி ஆகிடுவீர்கள்.! உஷார்.!
வெள்ளிக்கிழமையில் இதை செய்தால் கடனாளி ஆகிடுவீர்கள்.! உஷார்.!
மகாலட்சுமிக்கு உகந்த நாள்
வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. அந்த நாளில் சில காரியங்களை செய்தால் நாம் வீட்டில் செல்வம் சேராமல் தரித்திரம் ஏற்படும். அவை, என்னவென்று பார்க்கலாம்.
வீடு சுத்தம் செய்தல்
எக்காரணத்தைக் கொண்டும் வெள்ளிக்கிழமையில் வீட்டை ஒட்டடை அடிக்கக்கூடாது. வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் எனில் வியாழக்கிழமை ஒட்டடை அடித்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: வீட்டில் பண வரவு பெருக, குபேர விளக்கு பூஜையை கண்டிப்பாக செய்து பாருங்கள்.!?
எண்ணெய் குளியல்
அதுபோல வெள்ளிக்கிழமையிலோ அல்லது மற்ற தினங்களாக இருந்தாலும் மாலை நேரத்திலோ துணி துவைக்க கூடாது. இது நமக்கு கடன் பிரச்சினைகளை ஏற்படுத்தும். வெள்ளிக்கிழமையில் பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். இருப்பினும் ஆண்கள் என்னை தேய்த்து குளிக்க கூடாது.
முடி, நகம் வெட்டுதல்
வெள்ளிக்கிழமையில் முக சவரம் செய்வது, முடி வெட்டுவது மற்றும் நகம் வெட்டுவது உள்ளிட்ட காரியங்களில் ஈடுபடக் கூடாது. அதுபோல பூஜை அறை பொருட்களை சுத்தம் செய்வது கூடாது. பூஜை அறையையும் எக்காரணத்தை கொண்டும் வெள்ளிக்கிழமையில் சுத்தம் செய்யக்கூடாது. அதற்கு முந்தைய நாளில் சுத்தம் செய்து வைத்துக் கொள்வது நல்லது.
இதையும் படிங்க: சாணக்கிய நீதிபடி இந்த குணங்களைக் கொண்ட ஆண்களை தான் பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும் தெரியுமா.!?