வீட்டில் வைத்து வழிபடக்கூடாத சாமி படங்கள்.. பக்தர்களே தெரிஞ்சுக்கோங்க.!!
வீட்டில் இருக்க கூடாத சாமி படங்கள்.. பக்தர்களே தெரிஞ்சுக்கோங்க.!!
தெய்வங்கள் தெய்வ வழிபாட்டை ஊக்குவித்து மக்களை நல்வழிப்படுத்த ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு வீட்டிலும் பலரும் தாங்கள் விரும்பிய இஷ்ட தெய்வங்களின் புகைப்படங்களை வைத்து வழிபாடு செய்வது தொன்றுதொட்டு நடந்து வருகிறது.
இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அதாவது சனீஸ்வர பகவானின் புகைப்படத்தை வீட்டில் வைத்து பூஜை செய்யக்கூடாது. அதேபோல வீட்டு வாசலில் மகாலட்சுமி, மகாவிஷ்ணு ஆகியோரின் படங்களை தொங்க விடக்கூடாது.
நவக்கிரகங்களின் படங்கள் பூஜை அறையில் இருக்ககூடாது. நடராஜரின் உருவப்படம் வீட்டில் இருக்கக்கூடாது. ருத்ர தாண்டவம் ஆடும், ஆவேச பார்வை கொண்ட சாமியின் உருவப்படங்களும், சிதைந்த மற்றும் உடைந்த சிலைகளும் இருக்கக்கூடாது.