இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன்?.. விபரம் உள்ளே.. தெரிஞ்சிக்கோங்க.!
இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன்?.. விபரம் உள்ளே.. தெரிஞ்சிக்கோங்க.!
உறக்கத்தின் போது ஒவ்வொருவருக்கும் கனவு என்பது இயல்பானது. அந்த கனவு வாயிலாக சில பலன்களும் இருக்கின்றன. அறிவியலை பொறுத்த வரையில் தனிநபரின் ஆழ்மனதில் இருக்கும் நினைவுகள் கனவுகளாக வெளிப்படுகிறது என கூறுகின்றது.
இன்று நாம் இறந்தவர்களை கனவில் கண்டால் ஏற்படும் பலன்கள் குறித்து காணலாம். பொதுவாக இறந்தவர்களை கனவில் கண்டால் நல்ல செய்தி வரும் என்று கூறுவார்கள்.
நாம் நீண்ட காலம் வாழ்வோம் என்பது பொருள். இறந்தவர்கள் நம்மை ஆசீர்வதித்தால் எல்லாவிதமான நன்மையும் ஏற்படும். இறந்த தாய் கனவில் வந்தால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அல்லது உங்களுக்கு பெண் குழந்தை பிறக்கப் போகிறது என அர்த்தமாகும்.
இறந்தவர்களுடன் பேசுவது போல கனவு கண்டால் புகழ் கிடைக்கப்போகிறது என அர்த்தம். வேண்டப்பட்டவர்கள் இறப்பது போல கனவு கண்டால் துன்பங்கள் நம்மை விட்டு நீங்குகிறது.
இறந்தவர்கள் அழுவது போன கனவு வந்தால், அது நல்லது இல்லை. கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்வது நல்லது. இறந்தவர்களை தூக்கிச் செல்வது போல கனவு வந்தால் நன்மையும் உண்டாகும்.
இறந்து போன பெற்றோரை கனவில் கண்டால் சம்பந்தப்பட்ட நபருக்கு ஏற்படும் ஆபத்தினை சுட்டிக்காட்டி இருவரும் எச்சரிக்கை செய்ய வந்துள்ளார்கள் என அர்த்தம். தான் இறப்பது போல் கனவு வந்தால் நன்மை உண்டாகும், வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கும்.