நினைத்ததை நிறைவேற்றிய சபரிமலை ஐயப்பன்.! 18 ஆயிரம் நெய் தேங்காய் அபிஷேகம் செய்யும் பக்தர்.!
நினைத்ததை நிறைவேற்றிய சபரிமலை ஐயப்பன்.! 18 ஆயிரம் நெய் தேங்காய் அபிஷேகம் செய்யும் பக்தர்.!
சபரிமலை வரலாற்றில் முதல்முறையாக கர்நாடகாவை சேர்ந்த ஒரு பக்தர், ஐயப்பனுக்கு 18 ஆயிரம் தேங்காய் நெய்யபிஷேகம் நடத்த உள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவர் தான் நினைத்திருந்த காரியம் சபரிமலை ஐயப்பனின் அருளால் வெற்றிகரமாக நிறைவேறியதற்காக 18 படிகள், 18 மலைகளை நினைத்து நேர்த்திக்கடனாக 18 ஆயிரம் நெய் தேங்காய்களை அபிஷேகம் செய்ய முடிவு செய்துள்ளார்.
பொதுவாக சபரிமலைக்கு வரும் பக்தர்கள் தங்களது இருமுடியில் 1, 2 நெய் தேங்காய்களை தான் கொண்டு வருவார்கள். இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பக்தர் ஒருவர் 18 ஆயிரம் தேங்காய் நெய்யபிஷேம் நடத்த உள்ளார். அந்த பக்தர், நாளை 5ம் தேதி 18 ஆயிரம் தேங்காய் நெய்யபிஷேகம் நடத்தவுள்ளார். சபரிமலையில் அதற்காக பல லட்சம் ரூபாய் பணத்தையும் கட்டியுள்ளார்.
இதன் காரணமாக, அவர் 18 ஆயிரம் தேங்காய், மற்றும் அபிஷேகத்திற்கு தேவையான நெய் ஆகியற்றை சேகரித்து லாரியில் பம்பைக்கு அனுப்பி வைத்துள்ளார். லாரி மூலம் அனுப்பி வைத்த தேங்காய் மற்றும் நெய் ஆகியவற்றை தேவஸ்தான தலைவர் பெற்றுக்கொண்டார். தேவஸ்தான ஊழியர்களின் உதவியுடன் 18 ஆயிரம் தேங்காய்களிலும் நெய்யை நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. சபரிமலை வரலாற்றிலேயே, ஒரே பக்தர் 18 ஆயிரம் தேங்காய் நெய் அபிஷேகம் நடத்துவது என்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.