இதை செய்தால், நடுத்தெருவுக்கு வந்துடுவீங்க.! இந்த பழக்கத்தை உடனே மாத்துங்க.!
இதை செய்தால், நடுத்தெருவுக்கு வந்துடுவீங்க.! இந்த பழக்கத்தை உடனே மாத்துங்க.!
அநீதி வழியில் பணம்
நம்மிடம் இருக்கும் பணத்தை அனைத்தும் இழந்து, நம்மை வறுமையில் தள்ளக்கூடிய பழக்க வழக்கங்கள் குறித்து சாணக்கிய நீதி கூறும் தகவல்களை பார்க்கலாம். தவறான வழியில் பணம் சம்பாதித்தால் எப்படி அவர்கள் சம்பாதித்தார்களோ? அதைவிட அதிகமாக அந்த பணத்தை சீக்கிரம் இழந்து, வறுமை நிலையை அடைவார்கள்.
மற்றவர்களை ஏமாற்றி பணம் சேர்த்தாலோ அல்லது மற்றொருவரை துன்புறுத்தி பணத்தை பெற்றாலோ அந்த பணம் நம்மிடம் இருக்கும் மற்ற செல்வங்களையும் இல்லாமல் செய்யும். துரோகம் செய்து பணம் சம்பாதித்தால் அது நீண்ட காலம் நம்மிடம் இருக்காது. அப்படிப்பட்ட பணம் நம்மிடம் இல்லாமல் இருப்பது தான் நல்லது.
கடின உழைப்பு தான் கைகொடுக்கும்
கடின உழைப்பாலும், நல்ல செயலாலும் மட்டுமே செல்வத்தை பெற வேண்டும். சட்டத்திற்கு புறம்பான அல்லது விரோதமான பாவச் செயல்களில் இருந்து பணம் சம்பாதித்தால் நமக்கு வறுமை தான் கிடைக்கும்.
வரவுக்கு மீறி செலவு செய்தால் அவர்கள் விரைவில் வறுமைக்கு செல்வார்கள். பணத்தின் மதிப்பை தெரியாமல், யோசிக்காமல் செலவு செய்யும் பழக்கம் இருந்தால், அதை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். வருமானத்தை விட அதிக செலவு செய்தால் பிற்காலத்தில் பொருளாதார பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இது நமது வாழ்க்கையையே ஆபத்தில் தள்ளும்.
திட்டமிட்டு செலவு செய்தல் வேண்டும்
பணத்தை திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும். பணத்தை எப்படி இழக்கிறோம் என்பதே தெரியாமல் நம்மில் பலரும் செலவு செய்து விட்டு திடீரென இருந்த பணம் எல்லாம் எங்கே போயிற்று என்று குழம்புவார்கள். இது போல திட்டமிடாமல் செலவு செய்தால் கடன் பிரச்சனை அதிகமாகி வாழ்வில் இருந்து மீள முடியாத நிலை ஏற்படும்.
சரியான முதலீடு
பணத்தை சரியாக சம்பாதிக்கவும் அதை சரியான இடத்தில் முதலீடு செய்து இரட்டிப்பாகவும் நமக்கு தெரிய வேண்டும். இந்த பழக்கம் மற்றும் திறமை நமக்கு இல்லை என்றால் நாம் வறுமையில் தான் எப்போதும் இருப்போம்.