வீட்டின் வடக்குதிசையில் இதை வைத்தால், பணவரவு பயங்கரம்.! கடன் காணாமல் போகும்.!
வீட்டின் வடக்குதிசையில் இதை வைத்தால், பணவரவு பயங்கரம்.! கடன் காணாமல் போகும்.!
நாம் வேலை செய்து சம்பாதிக்கும் பணம் நமக்கு போதுமானதாக இருக்கிறதா என்றால் இல்லை என்று தான் பலரும் கூறுகின்றனர். இது போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் சாஸ்திரத்தில் சில தீர்வுகள் இருக்கின்றன. ஆனால், அதை எல்லாம் யாரும் கண்டு கொள்வதே இல்லை.
கடன் சுமை
வங்கிகளிலும் மற்ற வட்டி வியாபாரிகளிடமும் சென்று கடன் வாங்கி, அந்த கடனை கட்ட முடியாமல் அவதிப்படுகின்றோம். இதையெல்லாம் திருப்பி செலுத்த முடியாத போது கடன் சுமை அதிகரித்து பல்வேறு சிக்கல்களில் நாம் மாட்டிக் கொள்கிறோம். இந்த கடன் பிரச்சனைகளை குறைந்து உங்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டுமானால் சில பரிகாரங்களை இங்கே குறிப்பிடுகிறோம். அதை முயற்சி செய்து பாருங்கள்.
வாஸ்து சாஸ்திரம்
வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒரு வீட்டில் இருக்கும் குறிப்பிட்ட பொருட்கள் அந்தந்த திசையில் வைக்கப்பட்டால் மட்டும்தான் நமக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். தவறான திசையில் வைத்தால் துரதிஷ்டம் ஏற்படும். இதனால், நாம் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். இதனால், தான் வாஸ்து சாஸ்திரத்திற்கு இந்து மதத்தில் அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வடக்கு திசையில் நமக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
செல்வகடவுள் குபேரன்
இதற்கு காரணம் செல்வ கடவுள் குபேரன் வடக்கு திசையில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, வாஸ்து தோஷங்களை அவர் நிவர்த்தி செய்து நமக்கு நேர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்வாராம். வீட்டின் வடக்கு பகுதியில் கண்ணாடி வைப்பதால் வீட்டை நோக்கி நேர்மறை சக்திகள் ஈர்க்கப்படுகிறது. அது போல வீட்டின் சமையலறை வடக்கு திசையில் வைக்கப்பட்டால் வீட்டில் பணப்புழக்கத்திற்கும், உணவு பொருட்களுக்கும் பஞ்சம் இருக்காது என்று கூறப்படுகிறது.
வடக்கு திசையின் முக்கியத்துவம்
மேலும் வீட்டின் முக்கிய நுழைவு வாயில் வடக்கு திசையை பார்த்து இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அடுத்ததாக மணி பிளான்ட் வடக்கு திசையில் வைக்கலாம். வீட்டின் வடக்கு திசையில் துளசி செடியை வைப்பதால் ஆரோக்கியம் அதிகரிக்கும். நோய் நொடிகளால் ஏற்படும் வீண் விரயத்தை தவிர்க்கலாம். வடக்கு திசையில் குபேரன் சிலையை வைத்தால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். இது போன்ற விஷயங்களை நாம் செய்வது மிகவும் எளிமையானது தான். ஆனால், இதை நாம் கவனமாக செய்யும்போது வீட்டில் கடன் பிரச்சனைகள் நீங்கி பண பழக்கம் அதிகரிக்கும் .