பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமை : விரதம் இருந்து இன்று செய்யவேண்டியவை என்ன?...! மறந்துடாதீங்க..!!
பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமை : விரதம் இருந்து இன்று செய்யவேண்டியவை என்ன?...! மறந்துடாதீங்க..!!
புரட்டாசி மாதத்தின் ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் நமது வாழ்க்கை செம்மைப்படும். இன்றைய நாளில் காலை நேரத்தில் பிரம்ம முகூர்த்தம் என்ற காலை 4 மணிக்குள் 6 மணிக்குள் எழுந்து, வீட்டினை சுத்தம் செய்து குளித்து இருக்க வேண்டும்.
பின், பெருமாளுக்கு உகந்த திலகமிட்டு, அழகிய மாவுஅரிசி கோலம் இடுவது வீட்டில் நம்முடன் இருக்கும் சிறு உயிர்களுக்கும், பறவைகளுக்கும் உணவாக அமையும். விளக்கில் இருக்கும் பழைய திரியை எடுத்துவிட்டு புதிய எண்ணெய் திரி போட்டு தீப ஏற்ற வேண்டும். எளிமையான இனிப்பு உணவை செய்துஇறைவனுக்கு படைக்கலாம்.
இயன்றவர்கள் வடை பாயாசத்துடன் உணவு சமைத்து வாழை இலையில் படைக்கலாம். இன்றைய நாளில் கோவிந்தா என்று கூறுவது நற்பலனை கிடைக்க வைக்கும். பின்னர், வீட்டில் மற்றும் அருகில் இருக்கும் குழந்தைகளுக்கு வயிறார விருந்து படைத்து அல்லது ஏழை எளியோருக்கு உணவு வழங்கி பெருமாள் கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்தால் நமது வாழ்க்கை மேம்படும்.