புண்ணியம் தரும் சனிக்கிழமை விரத வழிபாடு.. உடல்நல குறைவால் அவதிப்படுபவர்கள் இதை செய்யுங்கள்.!
புண்ணியம் தரும் சனிக்கிழமை விரத வழிபாடு.. உடல்நல குறைவால் அவதிப்படுபவர்கள் இதை செய்யுங்கள்.!
ஆயுள், ஆரோக்கியம் மற்றும் செல்வம் அனைத்தும் நமக்கு பரிபூரணமாக கிடைக்க சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபாடு மேற்கொள்வது நல்லது. மற்ற நாட்களில் விரதம் இருப்பதை விட சனிக்கிழமை விரதத்திற்கு மிகுந்த சிறப்பு உண்டு. தொடர்ந்து 11-51 வாரங்கள் நாம் சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் நமது பாவங்கள் அனைத்தும் நீங்கி நமக்கு புண்ணியத்திற்கான பலன்கள் வந்து சேரும்.
சனி பகவானை தான் நவகிரகங்களில், ஆயுள்காரகன் என்று அழைக்கின்றோம். நமது உடல்நலம் மற்றும் ஆயுள் அவரை பொறுத்துதான் அமையும். சனியைப் போல கெடுப்பவரும் இல்லை. கொடுப்பவரும் இல்லை என்பது பழமொழி. இதனால்தான் சனி பகவான் என்றாலே பலருக்கும் பயம் ஏற்படும். நமது ராசிகளில் அவர் சஞ்சரிக்கும் நேரத்தில் அதிகப்படியான கஷ்டங்களை கொடுக்கும் அதே சனீஸ்வரன் நம் ராசியை விட்டு செல்லும்போது நமக்கு பொன்னும் பொருளும் அள்ளித் தருவார் என்பது நம்பிக்கை. சனி தோஷம் இருப்பவர்கள் அவர் மனதை குளிர்விக்க ஏழரை சனி காலகட்டத்தில் சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது.
சனிக்கிழமை காலையில் தலை குளித்துவிட்டு, வீட்டில் விளக்கேற்றி மனதார சனி பகவானை நினைத்து கும்பிட வேண்டும். பின் பால் ,பழம், தண்ணீர் மட்டும் சாப்பிட்டு காலை மதியம் இரு வேளையும் விரதம் இருக்க வேண்டும். மாலையில் சனீஸ்வரன் கோவிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். அருகில் சனீஸ்வரன் கோவில் இல்லை என்றால், ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று அவரை வழிபடலாம். அதன் பின் வீட்டிற்கு வந்து விரதத்தை முடிக்கலாம். இந்த விரதத்தை மேற்கொள்வதால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகும். வறுமையில் வாடுபவர்களுக்கு பொன் பொருள் சேரும். நீண்ட நாள் பிணி தொல்லையால் அவதிப்படுபவர்கள், இந்த விரதத்தை கடைபிடிப்பது அவர்களது நோயிலிருந்து காப்பாற்றும்.