சிவனை லிங்க வடிவில் வழிபடுவது ஏன்.? லிங்க புராணம் கூறும் கதை.!!
சிவனை லிங்க வடிவில் வழிபடுவது ஏன்.? லிங்க புராணம் கூறும் கதை.!!
சிவனை ஏன் லிங்க ரூபமாக வழிபடப்படுகிறார் என்பதற்கு லிங்க புராணம் ஒரு கதை சொல்கிறது.
ஒருமுறை பிரம்மாவிற்கும் மகா விஷ்ணுவுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர்? என்ற வாக்குவாதம் ஏற்பட்டபோது மிகப்பெரிய அக்னி கோலமாக அவர்கள் நடுவே தோன்றினார் சிவபெருமான்.
அதுவே முதல் முதலாக இறைவன் எடுத்த லிங்க வடிவம். அன்று முதல் முதலாக லிங்கோத்பவம் உதயமாயிற்று.
லிங்கோத்பவம் என்றால் லிங்கம் தோன்றுதல் என்று பொருள். அன்று முதல் இன்று வரை சிவபெருமான் லிங்க உருவத்திலே தான் வழிபடப்பட்டு வருகிறார்.
அவ்வாறு வழிபாட்டுக்குரிய லிங்கங்கள் பலவகையாகக் கூறப்படுகின்றன.
சுயம்பு லிங்கம் :
தானாகவே இறைவனின் இச்சைப்படி தோன்றிய லிங்கம்.
தெய்வீக லிங்கம் :
தேவர்களால் பூஜிக்கப்பட்டு ரிஷியின மூலமாக பூமிக்கு வந்த லிங்கம்.
அர்ஷ லிங்கம்:
ரிஷிகளும் முனிவர்களும் தங்கள் வழிபாட்டுக்கென உருவாக்கிய லிங்கம்.
மனுஷ்ய லிங்கம் :
மனிதர்களால் உருவாக்கப்பட்ட லிங்கம். இது பல வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.
கீழே உள்ள சதுரப் பகுதி பிரம்ம பாகம் எனவும், நடுப்பகுதி விஷ்ணு பாகம் எனவும், மேல் பகுதி ருத்ர பாகம் எனவும் வழங்கப்படுகிறது.
க்ஷணிக லிங்கம் :
தற்காலிக வழிபாட்டுக்கு மட்டும் பயன்படுத்துவது.
முற்காலத்தில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் தங்களுடன் லிங்கத்தை எடுத்துச் செல்லாமல் ஆங்காங்கே கிடைக்கும் பூஜைப் பொருட்களைக் கொண்டு அன்றைய பூஜைக்காக உருவாக்கும் லிங்கமே க்ஷணிக லிங்கம். இத்தகைய லிங்கங்கள் மலர், அன்னம், சந்தனம், விபூதி ஆகிய பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படலாம்.