நாளை வியாழன்.. கொட்டிக்கொடுக்கும்.. குருவுக்கு விரதம் இருந்தால் நடக்கும் அதிசயம்.!
நாளை வியாழன்.. கொட்டிக்கொடுக்கும்.. குருவுக்கு விரதம் இருந்தால் நடக்கும் அதிசயம்.!
குரு பகவான் வழிபாடு
குரு பகவானின் அருளை பெற வியாழக்கிழமை ஒரு சிறப்பான நாளாகும். கல்வி, தொழில் உள்ளிட்ட முன்னேற்ற விஷயங்களில் சாதனை செய்ய குரு பகவான் வழிபாடு மிகவும் அவசியம். இந்த குரு வழிபாட்டினால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைப்பதுடன் செல்வ செழிப்புமிக்க வாழ்க்கையும், தங்கு தடை இல்லா மகிழ்ச்சியும் கிடைக்கும்.
குரு தோஷம்
குழந்தையின்மையால் அவதிப்பட்டு வரும் தம்பதிகள் இந்த குரு பகவான் விரதத்தை மேற்கொள்ளலாம். மேலும், திருமணத்திற்கு வரன் தேடி க்கொண்டிருக்கும் நபர்களும் குரு பகவானுக்கு விரதம் இருக்கலாம். இதனால், குரு தோஷம் நீங்கி குடும்பத்தில் சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். அப்படிப்பட்ட குரு பகவானுக்கு எவ்வாறு விரதம் மேற்கொள்ளலாம் என்பது பற்றி பார்க்கலாம்.
இதையும் படிங்க: ரிஷபத்தில் வக்ரபெயர்ச்சி.. 5 ராசிகளுக்கு குருவால் நடக்கப்போகும் அதிசயம்.!
வியாழக்கிழமை விரதம்
வியாழக்கிழமை நாட்களில் அதிகாலை எழுந்து குளித்துவிட்டு வீட்டை சுத்தம் செய்துவிட்டு காலை நேரத்தில் உணவு எதுவும் சாப்பிடாமல், குரு பகவானுக்கு விளக்கேற்றி வழிபடலாம். அதன் பின்னர், வீட்டில் சைவ உணவை சமைத்து அந்த உணவை குரு பகவானுக்கு படையலிட்டு விரதத்தை முடிக்கலாம்.
அன்னதானம்
பின்னர், இந்த படையல் உணவுடன் சேர்த்து அன்னதானம் செய்ய உணவுகளை சமைத்து அருகில் இருக்கும் குரு பகவான் சந்நிதிக்கு சென்று அங்கு வருபவர்களுக்கு தானம் செய்யலாம். குரு பகவான் கோவில் வீட்டிற்கு அருகில் இல்லை என்றால், சிவன் கோயிலில் இந்த அன்னதானத்தை நாம் வழங்கலாம்.