நாளைய தினத்தை தவறவிடாதீர்கள்.! இப்படி தீபமேற்றினால் அசுர வளர்ச்சி தரும் வாழ்வு ஏற்படும்.!
நாளைய தினத்தை தவறவிடாதீர்கள்.! இப்படி தீபமேற்றினால் அசுர வளர்ச்சி தரும் வாழ்வு ஏற்படும்.!
மார்கழி ஞாயிறு
சூரிய பகவான் தான் நவகிரகங்கள் அனைத்திற்கும் தலைவனாக இருப்பவர். சூரியன் உதிக்கவில்லை என்றால் இந்த பூமியில் ஒரு புழு பூச்சி கூட இருக்க முடியாது. பூமிக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது சூரியன் தான். சூரியனுக்கு சிறப்பான கிழமை என்றால் அது ஞாயிற்றுக்கிழமை தான். அதிலும் மார்கழி மாதத்தில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமையில் சூரிய பகவானை வழிபாடு செய்வதால் மிகுந்த நன்மை ஏற்படும்.
தடைகள் நீங்கும்
மார்கழியில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பின்வருமாறு வழிபாடு செய்தால் வாழ்க்கையில் மன பயம் நீங்கி தைரியம் ஏற்படும். மேலும், நோய் நொடிகள் அண்டாது. முன்னேற்ற பாதையில் தடைகள் ஏற்படுவது குறையும். சிலர் மாடு மாதிரி கஷ்டப்பட்டு உழைப்பார்கள்.
இதையும் படிங்க: உங்களுக்கு இப்படி கனவு வந்தால், உஷாராக இருக்கணும்.. கனவு பலன்கள்.!
ஆனால், அவர்கள் வாழ்க்கையில் பெரிய அளவில் முன்னேற்றம் இருக்காது. என்ன காரணம் என்று புரியாமல் அவர்கள் தவித்து வருவார்கள். அவர்கள் மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமையில் பின்வரும் வழிபாடை செய்தால் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றம், முன்னேற்றம் அனைத்தையும் விரைவில் உணர முடியும்.
கோதுமை தீப வழிபாடு
மார்கழி ஞாயிற்றுக்கிழமையில் அருகில் இருக்கும் நவகிரக சன்னிதானத்திற்கு செல்லவும். அங்கிருக்கும் சூரிய பகவானுக்கு கோதுமை தீபம் ஏற்றுவது நமது கவலைகளையும், துன்பங்களையும் போக்கி சிறப்பான வாழ்வை தரும். ஒரு பேப்பர் தட்டில் கைப்பிடி அளவு கோதுமையை நிரப்பி, அதில் இரு மண் அகல் விளக்குகளை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரியிட்டு ஏற்றவும். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் இதனை வீட்டிலேயே செய்யலாம். வீட்டில் கிழக்கு திசை நோக்கி இந்த பூஜையை மேற்கொள்ளலாம்.
இரட்டிப்பு பலனுக்கு
இவ்வாறு, செய்வதால் நமது ஜாதகத்தில் சூரிய பகவானால் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் அது அனைத்தும் நீங்கி சிறப்பான வாழ்வு நமக்கு கிடைக்கும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் இதை செய்யலாம்.
ஆனால், மார்கழி மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமையில் இந்த பரிகாரத்தை நாம் செய்யும் போது நமக்கு இரண்டு மடங்கு பலன் கிடைக்கும். எனவே, நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை மேற்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்து முன்னேற்றம் ஏற்படுவதை கண்கூடாக காண்பீர்கள்.