×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆண்கள் ஏன் வீட்டில் விளக்கு ஏற்றக்கூடாது தெரியுமா?.. காரணம் இதுதானாம்..! மறந்தும் தவறை செஞ்சிடாதீங்க..!!

ஆண்கள் ஏன் வீட்டில் விளக்கு ஏற்றக்கூடாது தெரியுமா?.. பெண்கள் விளக்கேற்றும் காரணம் இதுதானாம்..! மறந்தும் தவறை செஞ்சிடாதீங்க..!!

Advertisement

 

வீட்டில் இருக்கும் பிரச்சினைகள் நீங்கவும், இனிய எண்ணங்கள் ஈடேறவும், மன அமைதி கிடைக்கவும் இறைவனடியில் வேண்டி பூஜை போன்றவை செய்கிறோம். பூஜை அறைகளில் விளக்கு ஏற்றுவது பெண்கள் தான். ஆண்கள் வீட்டில் ஏன் விளக்கு ஏற்ற கூடாது? என்பதை இன்று காணலாம். 

ஜோதி உண்மையான கடவுள் என்று வர்ணிக்கப்படுகிறது. எந்த ஒரு வீட்டிலும் காலை மற்றும் மாலை வேலைகளில் விளக்கேற்றி வழிபடுகிறார்களோ, அந்த வீட்டில் நிம்மதி, செல்வம் வளம் காணப்படும். விளக்கு மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. தீபம் ஈசனை குறிப்பிடுகிறது. 

வீட்டை பொறுத்த வரையில் பெண்கள் மகாலட்சுமியாக இருப்பதால், அவர்களின் கையால் தீபம் ஏற்றும் போது மகாலட்சுமி மனமகிழ்ந்து செல்வ வளத்தை வழங்குகிறார். ஜோதியை ஒளிர விட்டு ஈசனை துதிக்கும் காரணத்தால், வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள் நீங்கும். 

காலை-மாலைகளில் இதனை செய்தால் கட்டாயம் நன்மை கிடைக்கும். பலரும் இம்முறையை கைவிட்டதால் தான் குடும்பத்தில் சண்டை, சச்சரவு போன்றவை வருகிறது. மேலும், நிம்மதியும் இழக்கப்படுகிறது. ஐயன் ஈசன் மற்றும் அம்மா மகாலட்சுமியை தினமும் வழங்கினால் கஷ்டம், துன்பங்கள் ஏற்படாது, பிரச்சனை இருக்காது, சந்தோஷம் நிலவும். 

எந்த வீட்டில் இதனை செய்ய தவறுகிறார்களோ, அந்த வீட்டில் கட்டாயம் அதுபோன்ற பிரச்சனைகளும் வரும். வருமானத் தடை, தொழில் விருத்திகளையும் இழக்க நேரிடும். ஆண்கள் வீட்டில் பெரும்பாலும் இருப்பது கிடையாது. அவரிடம் தெளிவான சிந்தனை என்பது மிகவும் குறைவுதான். பக்தியில் நினைக்கக்கூடிய மனம் என்பது அரிதான விஷயம் என்பதால், ஆண்கள் விளக்கு ஏற்றினால் எந்த பலனும் கிடைக்காது. விளக்கு ஏற்றும் சமயத்தில் முழு ஈடுபாடுடன் இறை சிந்தனையோடு ஏற்றுவது நல்லது.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vilaku #Vilaku etruthal #Spiritual Tips
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story