விநாயகருக்கு கொழுக்கட்டை பிடிக்க காரணமான ஞானபாலி கதை பற்றி தெரியுமா.?! சுவாரஸ்ய புராணக்கதை.!
விநாயகருக்கு கொழுக்கட்டை பிடிக்க காரணமான ஞானபாலி கதை பற்றி தெரியுமா.?! சுவாரஸ்ய புராணக்கதை.!
முழு முதல் கடவுளாக பார்க்கப்படும் விநாயகருக்கு படையலிடும் போது பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டாலும், முதன்மையாக கருதப்படுவது கொழுக்கட்டை தான். விநாயகருக்கு கொழுக்கட்டை மிகவும் பிடித்த உணவு என்பது அனைவருக்கும் தெரியும் அதற்கு காரணம் என்ன என்பது பலருக்கும் தெரியாது.
முன்பொரு காலத்தில் ஞானப்பாலி என்ற அரசன் விநாயகரின் தீவிர பக்தராக இருந்தார். அவரது நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. மக்களை அந்த பஞ்சத்தில் இருந்து காக்க ருத்திர யாகம் ஒன்றை ஞானபாலி மேற்கொண்டான். அந்த யாகம் நடந்து கொண்டிருந்தபோதே சிற்றின்ப ஆசை ஏற்பட்டு ஞானபாலி நடுவில் எழுந்து சென்று விட்டு மீண்டும் வந்துள்ளான். இப்படி பாதியில் யாகத்தை நடத்தினால், ஆபத்து வரும் என்று குருக்கள் கூறி விட மறுநாள் யாகத்தை தொடர்ந்தான்.
இதனால் ஆத்திரமடைந்த அஷ்டதிக் பாலகர்கள் அந்த அரசனை ஒற்றை கண் அரக்கனாக மாறி பசியுடன் அலையும் படி சாபம் கொடுத்தனர். இதனால், அரக்கனாக மாறிய அரசன் ஞானபாலி கண்ணில் படும் மனிதர்களை எல்லாம் விழுங்க ஆரம்பித்தான். அப்போது கூட விநாயகர் வழிபாட்டை அவன் நிறுத்தவில்லை.
இதனால் மக்கள் தேவர்களை நாடினார்கள். அவனை அழிக்க முடியாததற்கு காரணம் விநாயகரின் ஆசி இருந்தது தான் என்பதை தேவர்கள் உணர்ந்து விநாயகரின் உதவியை தேடி சென்றனர். ஞான பாலிக்கு அருள் புரியவும், மக்களை காப்பாற்றவும் வேடனாக விநாயகர் அவதரித்து ஞான பாலியுடன் சேர்ந்து சண்டை போட்டார். வேடன் வடிவத்தில் இருந்த விநாயகரை ஞான பாலியால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
இதனால், தன்னுடன் சண்டை இடுவது விநாயகர் தான் என்பதை புரிந்து கொண்ட அவன் மன்னித்து வாழ்வளிக்கும்படி வேண்டினான். விநாயகருக்கு தனது பக்தனை கொள்ள மனம் வரவில்லை. அதே நேரத்தில் அப்படியே விட்டு செல்லவும் மனம் வரவில்லை. எனவே ஞானபாலியை பிடித்து கொழுக்கட்டையாக மாற்றி அப்படியே விநாயகர் விழுங்கிவிட்டாராம். ஞானபாலி கொழுக்கட்டை வடிவில் விநாயகர் பெருமானின் வயிற்றில் தங்கி விட்டான் என்று கூறப்படுகிறது.
இவ்வளவு அக்கிரமங்கள் செய்திருந்தாலும் கூட எனது தனது பக்தரான ஞான பாலியை விநாயகர் எதுவும் செய்யவில்லை ஏனென்றால் அவருக்கு ஞானபாலி மீதி அவ்வளவு பிரியம். அந்த ஞானபாலி தான் கொழுக்கட்டை என்பதால் விநாயகருக்கு பிடித்த ஞானபாலியான கொழுக்கட்டையை அனைவரும் விநாயகர் சதுர்த்தி என்று செய்து அவருக்கு படையல் இட்டு வருகிறோம்.