கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனை தீர என்னதான் வழி?.. உங்களுக்கான அசத்தல் தீர்வு இதோ..!!
கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனை தீர என்னதான் வழி?.. உங்களுக்கான அசத்தல் தீர்வு இதோ..!!
கடன் பிரச்சனை என்பது ஒவ்வொருவருக்கும் இருக்கும் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. இது பல இன்னல்களுக்கும் வழிவகை செய்கிறது. சிறுக, சிறுக தேவைக்காக வாங்கி கடன் பின் நாட்களில் பெரிய அளவு இருக்கும்போது அது தவறு எனவும் புரியப்படும்.
கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சனையிலிருந்து விடுபடுவதற்கு செவ்வாயன்று விநாயகருக்கு பரிகாரம் செய்யலாம். மனிதனுக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சனையில் சம்பாத்தியம், குடும்ப செலவு போன்ற பிரச்சனைகளுக்கு நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் கடன் வாங்கப்படுகிறது.
கடனுக்கு வட்டிகட்ட இல்லாத பட்சத்தில் மேலும் அந்த கடன் அதிகரிக்கும். செவ்வாய்கிழமை குளித்துவிட்டு விநாயகர் கோவிலுக்கு சென்று விநாயகர் அபிஷேகங்கள் செய்து அலங்காரம் செய்து, வெற்றிலையை மாலையாக கோர்த்து விநாயகருக்கு அணிவிக்க கடன் பிரச்சனை தீரும்.
வெற்றிலை மாலை ஒற்றைப்படை என்ற எண்ணிக்கையில் இருப்பது நல்லது. இரட்டைபடையில் அணிவிக்க கூடாது. செவ்வாய்க்கிழமை விநாயகருக்கு வெற்றிலை மாலை போட்டு பரிகாரத்தை செய்தால் கடன் தொல்லையும் நீங்கும்.