காக்கை தலையில் அமர்ந்து சென்று விட்டதா.? இதை உடனே செய்யுங்கள்.!
காக்கை தலையில் அமர்ந்து சென்று விட்டதா.? இதை உடனே செய்யுங்கள்.!
சனி பகவானின் வாகனமான காக்கை பயந்த சுபாவம் கொண்ட ஒரு பறவையாகும். மனிதர்களின் முகத்தை உற்று நோக்கும் ஆற்றல் கொண்டது இந்த காக்கை. இதனருகில் மனிதர்கள் வந்தாலே பயந்து விலகிச் செல்லும். சில நேரங்களில் தன்னுடைய இறக்கையின் மூலமாக மனிதர்களின் தலையில் கொத்தி விட்டு சென்றுவிடும் அல்லது தலையில் தட்டி சென்று விடும்.
இப்படி ஒருவருக்கு நடந்தால், அவருக்கு சனியின் தோஷம் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். ஆனாலும் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்தால் பயம் எதுவும் தேவையில்லை. உடனடியாக குளித்துவிட்டு அவர்கள் அணிந்திருக்கும் உடையை வேறு யாருக்காவது தானம் செய்துவிடலாம்.
அதன் பின்னர் வறுமையின் பிடியிலிருப்பவர்களுக்கோ அல்லது ஊனமுற்ற நபர்களுக்கோ தங்களால் முடிந்தளவு சாப்பாடு வாங்கி கொடுக்கலாம். இது அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சனியின் தோஷத்தை குறைக்கும் என்று சொல்லப்படுகிறது.