திருமண அழைப்பிதழை தாம்பூலத்தில் வைத்து கொடுப்பதன் காரணம் இதுதானா? தெரிஞ்சுக்கோங்க மக்களே.!!
திருமண அழைப்பிதழை தாம்பூலத்தில் வைத்து கொடுப்பதன் காரணம் இதுதானா? தெரிஞ்சுக்கோங்க மக்களே.!!
திருமணம் ஆயிரம் காலத்து பயிர் என்றது சான்றோர் வாக்கு. திருமண நிகழ்ச்சி ஒவ்வொரு மாநிலம், மதம், சாதி, சமய பிரிவுகளுக்கு ஏற்ப அதன் கொண்டாட்டங்கள் மாறுபடும். தமிழகத்தை பொறுத்தமட்டில் திருமண அழைப்பிதழ் தாம்பூலங்களில் வைத்து கொடுக்கப்படும்.
கிராமப்புறங்களில் இன்றளவும் தாம்பூலத்தட்டு வெற்றிலை, பாக்கு, தேங்காய், மஞ்சள், குங்குமம், பணம் வைத்தும் கொடுக்கும் நடைமுறைகள் இருக்கின்றன. இது அந்தந்த உறவுமுறைகளை பொறுத்து மாறுகிறது. இன்று திருமண அழைப்பிதழ் தாம்பூலத்தில் வைத்துக் கொடுப்பது எதனால் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
திருமணம் நடைபெறும் வீட்டில் சுப காரியங்களுக்கு அழைப்புகள் அச்சடித்து உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுக்கப்படும். அவ்வாறு கொடுக்கப்படும் போது தாம்பூல தட்டில் வைத்து திருமண பத்திரிக்கை வழங்கப்படும்.
இதையும் படிங்க: சொர்க்க வாழ்வை தரும், தை மாத சோமவார பிரதோஷ வழிபாடு.. பிறைசூடிய சிவன் பூஜை.!
அழைப்பிதழை கொடுக்க வரும் நபரும், அதனை வாங்கும் நபரும் பொருளாதார ரீதியில் எப்படியான மாற்றத்தை கொண்டு இருந்தாலும், திருமணத்திற்கு வருவதில் எந்த விதமான வேற்றுமையும் இல்லை, உங்களை அழைப்பதிலும் மனம் வேற்றுமை இல்லை என்பதை உணர்த்தும் வகையில் தாம்பூல தட்டில் வைத்து திருமண அழைப்பிதழ் கொடுக்கப்படுகிறது.
அதேபோல, ஒரு நபர் மற்றொரு நபருக்கு பொருளை கொடுத்தால், ஒரு கை மேலேயும் மற்றொரு கை கீழேயும் இருக்கும். ஆனால், ஏற்றத்தாழ்வுகளை கடந்து சரிசமமாக கொடுக்கும் வகையில், தாம்பூலத் தட்டில் வைத்து இரு கரங்களாலும் அவை வழங்கப்படுகிறது.
அதனால்தான் முன்னோர்கள் அழைப்பிதழை மட்டுமல்லாது கடன், தானம் என எதை கொடுத்தாலும் தாம்பூலத்தில் கொடுத்தனர். இன்று தானம் வழங்குபவர் நாளை தானம் பெரும் நபராக கூட மாறலாம். வாழ்க்கையில் நிலை மாறலாம், ஆனால் மனிதர்களின் பண்பு ஒருங்கே அமைய வேண்டும் என்பதை மட்டும் அவை உணர்த்தும் வகையில் தாம்பூலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.+