நீச்சல் தெரியாமல் குளத்தின் ஆழத்திற்கு சென்று பறிதாபமாக உயிரைவிட்ட வாலிபர்..!
நீச்சல் தெரியாமல் குளத்தின் ஆழத்திற்கு சென்று பறிதாபமாக உயிரைவிட்ட வாலிபர்..!
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே குளிக்க சென்ற போது குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கயத்தாறு இந்திரா நகரைச் சேர்ந்தவர் சேகர் இவரது மகன் சுடலைமணி (21). இவரது தாய் தந்தை இருவரும் இறந்துவிட்டனர். பாட்டி வீட்டில் வளர்ந்து வருகிறார். இந் நிலையில் சுடலைமணி கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இன்று காலை 10 மணியளவில் தனது உறவினர்கள் முனியசாமி, மற்றும் அவரது நன்பர் ஆகியோருடன் சேர்ந்து பன்னீர் குளம் கிராமத்தில் உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார். சுடலைமணிக்கு நீச்சல் தெரியாது இதனால் அவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி உள்ளார்.
இதனைக் கண்ட உறவினர் இருவரும் அருகில் இருந்தவர்களை அழைத்துள்ளனர். அங்கு வந்த மகாராஜன் முத்துராமன் குளத்தில் இறங்கி சுடலையை தூக்கினார்கள். ஆனால் அதற்குள் சுடலைமணி உயிரிழந்துவிட்டார்.
தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சுடலைமணியின் உடலை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.