×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நாகையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள; புதுச்சேரி மது பாட்டில்கள் பறிமுதல்...!!

நாகையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள; புதுச்சேரி மது பாட்டில்கள் பறிமுதல்...!!

Advertisement

நாகையில் சாராயம் விற்ற பெண் அதிகாரிகளை கண்டதும் ஓட்டம் பிடித்தார். 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சாராயம் விற்ற பெண் அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து தப்பித்து ஓடிய நிலையில், அவரது வீட்டில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதுச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
 
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளிமாநில சாராயம் மற்றும் மது பாட்டில்கள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவது அதிக அளவில் நடைபெறுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தது. கிராமப் புறங்களில் வெளிமாநில மது விற்பனை படுஜோராக நடைபெற்று வந்தது. 

மாவட்ட காவல்துறை சார்பாக, வெளி மாநில மது விற்பனையை கண்காணித்து, மது குற்றங்களை தடுக்க மாவட்டத்தில் 9 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் நாகை மாவட்டம் கீழையூர் பகுதியில் புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுவதாக டாஸ்மாக் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி ஆய்வு நடத்தினர். அப்போது அங்குள்ள ஆனந்தம் நகரில் ஆரோக்கிய மேரி என்பவரது வீட்டில் புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து அந்த வீட்டுக்கு  வந்த டாஸ்மார்க் அதிகாரிகளை கண்டதும், ஆரோக்கியமேரி தப்பித்து ஓடினார். தொடர்ந்து வீட்டில் 36 பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த  1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதுவை மாநில 1824 மதுபாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

நாகை மதுவிலக்கு காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் ஒப்படைக்கப்பட்டது. மேலும் தப்பியோடிய சாராய வியாபாரி ஆரோக்கிய மேரியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil nadu #Nagaipatinam #Puducherry liquor bottles seized
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story