கொரோனா ஒரு பக்கம், பாம்புகள் ஒரு பக்கம்.! தஞ்சை அரசு மருத்துவமனையில் பிடிப்பட்ட 10 விஷப்பாம்புகள்..!
10 snakes chaged in thanjai government hospital
தஞ்சை அரசு மருத்துவமனையில் மகப்பேறு குழந்தைகள் நலம் மற்றும் கண் மருத்துவமனை பிரிவுகளின் கீழ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இங்கு தஞ்சை மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் அரசு மருத்துவமனையை சுற்றிலும் புதர்கள் மண்டி கிடப்பதால் அதில் நஞ்சு தன்மையுள்ள விஷப்பாம்புகள் அதிகம் காணப்படுவதாக புகார்கள் வந்துள்ளது. அதுமட்டுமின்றி இரண்டு நாட்களுக்கு முன்பு பணி முடிந்து வீட்டிற்கு சென்று செவிலியரை பாம்பு கடித்ததாகவும் கூறப்படுகிறது.
அதனை அடுத்து புதர்களை சுத்தம் செய்ய ஆட்கள் வந்துள்ளனர். அவர்கள் சுத்தம் செய்யும் போது அதிக அளவில் பாம்புகள் தென்படவே பாம்புகளை பிடிப்பவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களில் மட்டும் பத்துக்கும் மேற்ப்பட்ட விஷப்பாம்புகளை பிடித்துள்ளனர்.