தாய்யின் சேலையே மகனுக்கு தூக்கு கயிறாக மாறிய சோகம்.! கதறி துடித்த பெற்றோர்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்.!
12 years old boy dead while playing with mother saree
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் என்னும் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவருகிறார். சதீஷின் மனைவி கால்நடைத் துறையில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஆண்ட்ரூ (12) என்ற மகன் உள்ளார்.
ஆண்ட்ரு அருகில் உள்ள பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ஆண்ட்ரு தாயின் சேலையை ஊஞ்சல் போல கட்டி அதில் விளையாடியுள்ளார். விளையாட்டே வினையானது என்பதுபோல் சேலை ஆன்ட்ருவின் கழுத்தில் வேகமாக இறுக்கியுள்ளது.
இதில் மூச்சு திணறி ஆண்ட்ரு சம்பவ இடத்திலையே உயிர் இழந்துள்ளார். மகன் உயிர் இழந்ததை பார்த்ததும் பெற்றோர் கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க செய்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆன்ட்ருவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.