×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருச்சி அருகே சோகம்...மயங்கி விழுந்த சிறுவன்.!! வகுப்பறையில் பிரிந்த உயிர்.!!

திருச்சி அருகே சோகம்...மயங்கி விழுந்த சிறுவன்.!! வகுப்பறையில் பிரிந்த உயிர்.!!

Advertisement

திருச்சியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவன் வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள தச்சன்குறிச்சி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகன் வெற்றிவேலன். 13 வயதான சிறுவன் அங்குள்ள ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். மேலும் சிறுவயதிலேயே இதய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்திருக்கிறான்.

வகுப்பறையில் சுருண்டு விழுந்து மரணம்

இந்நிலையில் வழக்கம் போல் பள்ளிக்கு வந்த சிறுவன் வெற்றிவேலன் திடீரென வகுப்பறையில் மயங்கி விழுந்துள்ளான். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனடியாக மாணவனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கிச் சென்றனர். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பெத்த மகளுக்கே பாலியல் தொல்லை... ஆசிரியை மூலம் வெளிவந்த உண்மை.!! தந்தை போக்சோவில் கைது.!!

காவல்துறை விசாரணை

இந்த சம்பவம் குறித்து மருத்துவமனைக்கு விரைந்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: "புள்ளையும், புருசனும் வேணாம்.." ஃபேஸ்புக் லவ்வர் வேணும்.!! அடம்பிடித்த இளம்பெண்.!! அட்வைஸ் செய்த போலீஸ்.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #tiruchirapalli #13 year old boy died #Cardiac arrest
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story