"புருஷன் தொட்டா தப்பில்ல" 14 வயது சிறுமிக்கு பாழடைந்த வீட்டில் வைத்து நடந்த கொடுமை.!
புருஷன் தொட்டா தப்பில்ல 14 வயது சிறுமிக்கு பாழடைந்த வீட்டில் வைத்து நடந்த கொடுமை.!
தலைவிரித்தாடும் அட்டூழியங்கள்
சமீப காலமாகவே சோசியல் மீடியாக்களால் அரங்கேறி வரும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. என்னதான் நாம் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டாலும், இளம் தலைமுறையினர் கெட்டு சீரழிவதை தவிர்க்க முடியவில்லை.
இதற்கு சினிமாவில் காட்டப்படும் காதல் காட்சிகள் ஒருபுறம் என்றாலும், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளினால் அவர்கள் எளிதாக கெட்ட பாதைக்கு செல்கின்றனர். அப்படி இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் ஒரு சிறுமியின் வாழ்வில் நடந்த கொடுமையை தான் இந்த செய்தியில் பார்க்கப் போகிறோம்.
இதையும் படிங்க: "ராஜா வெளில வந்திடு" - அன்பாக அழைத்தும் வராத கேடி., கதவை உடைத்து உள்ளே சென்ற போலிஸ்.!
இன்ஸ்டாவில் மலர்ந்த காதல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் வள்ளவிலை பகுதியில் 21 வயது இளைஞரான ஜெர்வின் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு 14 வயது சிறுமி இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் ஆகியுள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருக்கிறது.
உன் புருஷன் உன்னை தொடக்கூடாதா.?
அந்த சிறுமியை தான் விரைவில் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஜெர்வின் தனது ஆசைக்கு இணங்க வைத்துள்ளார். அப்பகுதியில் இருக்கும் ஆள் அரவமற்ற ஒரு பாழடைந்த கட்டடத்திற்கு சிறுமியை அழைத்துச் சென்று, "நான் உன் புருஷன் தானே.? உன்னை தொடக்கூடாதா.?" என்று கூறி பாலியல் பலாத்காரம் செய்து இருக்கிறார். இந்த சம்பவம் முடிந்து சிறுமி வீட்டிற்கு வந்த சில நாட்களில் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
வயிற்றுவலியால் துடித்த சிறுமி
செப்டம்பர் மாதம் முதல் வயிற்று வலியில் துடித்த சிறுமியின் நிலையை அறிந்த தாய் அவரிடம் விசாரித்ததில் தனக்கு நடந்த அனைத்து விவரங்களையும் சிறுமி கூறி கதறி அழுதுள்ளார். இதனால், அதிர்ந்து போன தாய் காவல் நிலையத்திற்கு சென்று ஜெர்வின் மீது புகார் கொடுத்துள்ளார். தற்போது, ஜெர்வின் தலைமறைவாக இருக்கும் நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பேருந்துக்கு அடியில் கண்ட காட்சி.. பரபரவென ஓடிய பெண்.. கொத்தாக பிடித்த பயணிகள்.!