மறுவாழ்வு மையத்தில் பூரி சாப்பிட்டுவிட்டு கழிவறைக்குச் சென்ற 13 வயது சிறுவன் உயிரிழப்பு... போலீசார் தீவிர விசாரணை!!
மறுவாழ்வு மையத்தில் பூரி சாப்பிட்டுவிட்டு கழிவறைக்குச் சென்ற 13 வயது சிறுவன் உயிரிழப்பு... போலீசார் தீவிர விசாரணை!!
திருவள்ளூர் மாவட்டம் மெதிப்பாளையம் கிராமத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அகிலா. இவருக்கு திருமணமாகி மனோஜ் குமார் (14) என்ற மகன் உள்ளார். மனோஜ் குமார் அருகே உள்ள தலையாரிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான்.
ஆனால் மனோஜ் குமார் சரிவர பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளான். இதனால் மிகவும் மன வருத்தத்தில் இருந்த அகிலா தனது மகனை சோழவரம் அருகே உள்ள மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக கடந்த 21 ஆம் தேதி அனுமதித்துள்ளார்.
அங்கு சிறுவன் மனோஜ் குமாருக்கு தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு உணவாக பூரி சாப்பிட்டு விட்டு கழிவறைக்கு சென்று மனோஜ் குமார் அங்கே மயங்கி கீழே விழுந்து கிடந்துள்ளார். உடனே சிறுவனை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்செய்தியை கேட்டு மனோஜ் குமாரின் தாய் அகிலா அலறி துடித்தது அப்பகுதியில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.