யார் கெட்டவன்.? அவமானத்தால் தற்கொலை செய்து கொண்ட 15 வயது மாணவன்... உறவினர்கள் சாலை மறியல்... பரபரப்பு.!
யார் கெட்டவன்.? அவமானத்தால் தற்கொலை செய்து கொண்ட 15 வயது மாணவன்... உறவினர்கள் சாலை மறியல்... பரபரப்பு.!
பள்ளி ஆசிரியை திட்டியதால் மனமுடைந்த பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மாணவனின் இறப்பிற்கு நியாயம் கேட்டு அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி என்பவரது மகன் அஜய். 15 வயதான இவர் திருவாடனையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை மனமுடைந்த நிலையில் காணப்பட்ட இவர் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.