தாய் இல்லை... தந்தையும் இப்படி பண்ணீட்டாரே... பெற்ற மகள் என்று கூட பாராமல் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய காமுகன் கைது...
தாய் இல்லை... தந்தையும் இப்படி பண்ணீட்டாரே... பெற்ற மகள் என்று கூட பாராமல் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய காமுகன் கைது...
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான கோவிந்தன். இவரின் மனைவி இறந்த நிலையில் தனது மகளுடன் தனிமையில் வசித்து வந்துள்ளார். 17 வயதான அந்த சிறுமி 10 ஆம் வகுப்பு மட்டுமே முடித்து விட்டு வீட்டிலிருந்துள்ளார்.
இந்நிலையில் திருமணம் ஆகாத நிலையில் சிறுமி கர்ப்பமானதை அடுத்து அக்கம்பக்கத்தினர் சிறுமியிடம் கர்ப்பம் குறித்து விசாரித்துள்ளனர். அப்போது சிறுமியின் தந்தை மற்றும் அவரது நண்பர் முனுசாமி இருவரும் சேர்ந்து தன்னை பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்டதும், அதனால் சிறுமி கர்ப்பமானதும் தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் சிறுமியின் தந்தை கோவிந்தனையும், முனுசாமியையும் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.