டிடிவி தினகரனின் ஆதரவு, 18 எம்.எல்.ஏ-க்களின் அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது!.
18 MLA's hostel rooms are Locked and seal
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் புகார் அளித்த விவகாரத்தில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவான 18 எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார்.
சபாநாயகரின் உத்தரவுக்கு எதிராக டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவான 18 எம்.எல்.ஏ-க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் சுந்தர் ஆகியோர் இருவேறு மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதனையடுத்து அந்த வழக்கு, மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.
இதனையடுத்து சிலதினங்களுக்கு முன்பு தினகரனின் ஆதரவு 18 எம்எஎல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்பளித்தது. மேலும், அந்த எம்எல்ஏக்களின் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையையும் ரத்துசெய்தது.
இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கும் விடுதி(MLA hostel ) இயங்கி வருகிறது. இதில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களின் விடுதி அறைகளுக்கு, தமிழக அரசு பூட்டி சீல் வைத்துள்ளனர்.