லாட்ஜில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த அமமுக நிர்வாகி.! அரைகுறை ஆடைகளுடன் இருவர் கைது.!
உத்திமேரூரில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் பெண்ணுடன் ‘ஜாலி’யாக இருந்த அமமுக பிரமுகர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
உத்திரமேரூர் அடுத்த சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர் கார்த்திக். இவர், உத்திரமேரூர் நகர அமமுக செயலாளராக இருந்து வருகிறார். கார்த்திக் மற்றும் உத்திரமேரூர் அருகே உள்ள மருதம் கிராமத்தை சேர்ந்த வீரராகவன் ஆகிய இருவரும் நேற்று உத்திரமேரூர் நகரில் உள்ள ஒரு லாட்ஜில் தனித்தனி அறைகளில் பெண்களுடன் ஜாலியாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து போலீசார் அந்த தனியார் விடுதிக்கு திடீரென சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த விடுதியின் அறையில் கார்த்திக் ஒரு பெண்ணுடன் ஜாலியாக இருப்பது தெரிந்தது. இவரது பக்கத்து அறையில், வீரராகவன் ஒரு பெண்ணுடன் ஜாலியாக இருந்தது தெரிந்தது.
இதனையடுத்து இருவரையும் கையும் களவுமாக பிடித்து போலீசார் கைது செய்தனர். அவர்களுடன் இருந்த 2 பெண்களையும் போலீசார் மீட்டு அவர்களை மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.