தகராறில் பைக்கை கிணற்றில் தள்ளிவிட்ட மகன்.. அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவம்!
தகராறில் பைக்கை கிணற்றில் தள்ளிவிட்ட மகன்.. அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவம்!
கன்னியாகுமரியில் மகன் கிணற்றில் தள்ளிவிட்ட பைக்கை எடுக்க ஏற்றுக்கொள் இறங்கிய தந்தை உள்ளிட்ட 2 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே லட்சுமிபுரத்தை சேர்ந்த ஸ்ரீலிங்கம் என்பவருக்கும் அவரது மகன் செல்வாவுக்கு இடையே நேற்று நள்ளிரவு வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்வா தனது இருசக்கர வாகனத்தை அருகிலுள்ள சுற்றுச்சூழல் இல்லாத கிணற்றுக்குள் தள்ளிவிட்டுள்ளார்.
இதனையடுத்து நள்ளிரவில் கிணற்றில் விழுந்த இருசக்கர வாகனத்தை எடுக்க ஸ்ரீ லிங்கம் கயிறு கட்டி உள்ளே இறங்கிய போது விஷவாயு தாக்கியதில் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரைக் காப்பாற்ற சென்ற செல்வன் என்பவரும் விஷவாயு தாக்கி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.