விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கு... காவலர்கள் 2 பேர் கைது...
விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கு... காவலர்கள் 2 பேர் கைது...
சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் போலீஸ் கஸ்டடியில் இருக்கும் போது உயிரிழந்தார். அவரது உடலில் காயங்கள் இருப்பதாகவும், போலீசார் துன்புறுத்தியதன் காரணமாக தான் அவர் உயிரிழந்தார் என விக்னேஷ் குடும்பத்தினர் வழக்கு பதிவு செய்தனர்.
அதற்கு அரசியல் கட்சியினரும் குரல் கொடுத்தனர். அதன்பின் விக்னேசின் மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் விக்னேஷ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவியையும் அளித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் நேற்று சட்டசபையில் அதிமுக உறுப்பினர்கள், விசாரணை நேர்மையான முறையில் நடைப்பெற வேண்டும் என்றால் சிபிஐயிடம் வழக்கை ஒப்படைக்க வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தனர். இது குறித்து விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விக்னேஷ் மரணம் விவகாரத்தில் சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
பிரேத பரிசோதனை அடிப்படையில் கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை நடக்கிறது என தெரிவித்தார். மேலும் தலைமைச் செயலக காலனி நிலைய எழுத்தர் முனாஃப் மற்றும் காவலர் பவுன்ராஜ் ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.