கபடி போட்டியால் இரு கிராம மக்களிடையே ஆயுதங்களுடன் ஏற்பட்ட மோதல்... 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு...! 500 பேர் மீது வழக்குப்பதிவு..!
கபடி போட்டியால் இரு கிராம மக்களிடையே ஆயுதங்களுடன் ஏற்பட்ட மோதல்... 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு...! 500 பேர் மீது வழக்குப்பதிவு..!
கபடி போட்டியில் ஏற்பட்ட மோதலில், இரு கிராமம் மோதிக்கொண்டதால் 500 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விளாங்குளத்தூர் பகுதியில் கடந்த 2ஆம் தேதி மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கீழ்கன்னிச்சேரி கிராம அணி தோல்வியை தழுவியுள்ளது. இதனால் தோல்விடைந்த அணியை விளாங்குளத்தூர் கிராம இளைஞர்கள் கிண்டல் செய்ததாக தெரியவருகிறது.
இதன் காரணமாக அப்போதிலிருந்து இரு தரப்பினரிடையே வாக்குவாதம் மற்றும் லேசான மோதல் ஏற்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக இரு கிராமங்களை சேர்ந்த இளைஞர்களும் அவ்வப்போது மோதிக்கொள்ள தொடங்கியுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக கிராம மக்களுக்கு தகவல் தெரியவந்த நிலையில், இரண்டு கிராமமக்களும் ஆயுதத்தோடு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள புறப்பட்டு சென்றனர்.
இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இரு கிராம மக்களையும் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இரு கிராமத்தைச் சார்ந்த 500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.