ஆள் இல்லாத வீட்டை கண்காணித்து 20 லட்ச ரூபாய் மற்றும் 45 சவரன் நகையை ஆட்டையை போட்ட கொள்ளையர்..!
ஆள் இல்லாத வீட்டை கண்காணித்து 20 லட்ச ரூபாய் மற்றும் 45 சவரன் நகையை ஆட்டையை போட்ட கொள்ளையர்..!
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள புதூர் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார். இவர் தனது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயசித்ரா. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 10 ஆம் தேதி, தனது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்காக சரவணகுமார் குடும்பம் சகிதமாக பழனிக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். மறுநாள் காலை அந்த பக்கமாக வந்த கூர்க்கா சரவணகுமார் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து சரவணகுமாருக்கு தகவல் அளித்துள்ளார்.
தகலறிந்து அதிர்ச்சியடைந்த, சரவணகுமார் மற்றும் குடும்பத்தினர் உடனடியாக வீடு திரும்பினர். வீட்டில், பீரோவை உடைத்து அதில் இருந்த 44.5 சவரன் நகை மற்றும் ரூ.20 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்தது தெரியவந்தது. திருட்டு சம்ப்வம் குறித்து ஜெயசித்ரா, வடக்கிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த கொள்ளை சம்பவம் குறித்து வடக்கிப்பாளையம் காவல்துறயினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.