200 ஆண்டுகால பழமையான ஆலமரத்தை இடம் மாற்றி சாதனை செய்த இளைஞர்கள்.....!
200 ஆண்டுகால பழமையான ஆலமரம் இடமாற்றி சாதனை செய்த இளைஞர்கள்.....!
தென்காசியில் ஆலங்குளத்தில் 200 ஆண்டுகள் பழமையான ஆலமரம் நான்கு வழிச்சாலை பணிக்காக வேருடன் பிடுங்கி மாற்று இடத்தில் நடப்பட்டு உள்ளது.
நெல்லை தென்காசி நான்குவழிச்சாலை பணிக்காக நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஒப்பந்ததாரர்களால் சாலையோர மரங்கள் வெட்டப்பட்டும், சில இடங்களில் வேறொரு இடத்தில் மறுநடவு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஆலங்குளம் பேருந்து நிலையத்திற்கு கிழக்கில் சுமார் 200 ஆண்டுக்கு மேலான பழமையான ஆலமரம் ஒன்று இருந்தது. சாலை பணிக்காக மரம் மற்றும் கிளைக்கள் வெட்டும் பணி கடந்த வாரம் தொடைங்கியது. இந்த ஆலமரத்தை மறுநடவு செய்ய வேண்டும் என முடிவு செய்த ஆலங்குளம் பசுமை இயக்கம் தலைவர் சாமுவேல் பிரபு, அசுரா நண்பர்கள் ராஜா, குணா ஆகியோர் நெடுஞ்சாலைத்துறையினரிடம் அனுமதி பெற்றனர்.
இந்த பணியில் ஆலங்குளத்தில் உள்ள பொதுமக்கள், இளைஞர்கள், ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மரத்தை மாற்றி நடுவதற்கு முயற்சி எடுத்த ஆலங்குளம் பசுமை இயக்கம் மற்றும் அசுரா நண்பர்களை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டினார்கள்