கேரளா நிலச்சரிவில் மண்ணில் புதைந்த தமிழக குடும்பம்! ஒரே குடும்பத்தை சேர்ந்த 21 பேர் பலி!
21 tamil people did in kerala landslide
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நிலாம்பூர் பகுதியில் தொடர் கனமழையால் தண்ணீர் பெருக்கெடுத்து, தெருக்களில் தேங்கி நிற்கிறது. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு அதிகாலையில், ராஜமலை அருகே உள்ள பெட்டிமுடி என்கிற பகுதியில் அமைந்துள்ள தேயிலை எஸ்ட்டேட் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, எஸ்டேட் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடியிருப்புகள் மண்ணில் சரிந்தன.
கேரள மாநிலம் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் மற்றும் மாயமானவர்களில் பலர் தமிழகத்தின் துாத்துக்குடி மாவட்டம் கயத்தாறு மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியானது.
தமிழகத்தை சேர்ந்த அவர்கள் தலைமுறை தலைமுறையாக தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளனர். அதில், அனந்தசிவன், அவரது சகோதரர்கள் கணேசன், மயில்சாமி ஆகியோரின் குடும்பத்தைச் சேர்ந்த, 21 பேர் மண்ணிற்குள் புதைந்து பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
தற்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 21 பேர் பலியாகியிருப்பது தெரியவந்துள்ளதால், இது ஏற்கனவே 55 பேர் இறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டவர்களில் இருந்தவர்களா? இல்லை இது புதிததாக இறந்தவர்களா? என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. தமிழகத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 21 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.