தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

30 அடி பள்ளத்தில் மிதந்த இளைஞரின் சடலம்... அதிர்ச்சியில் மக்கள்... போலீசார் விசாரணை!!

30 அடி பள்ளத்தில் மிதந்த இளைஞரின் சடலம்... அதிர்ச்சியில் மக்கள்... போலீசார் விசாரணை!!

22 years old man body find in 30 feet kuli in Krishnagiri Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசஹள்ளி கிராமத்தில் உள்ள தற்போது பயன்பாட்டில் இல்லாத அரசுக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று உள்ளது‌. வெகு நாட்களாக பயன்பாட்டில் இல்லாத அந்த கல்குவாரியில் உள்ள 30 அடி பள்ளத்தில் 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் முத்துமணி இறந்து சடலமாக கிடந்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முத்துமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Krishna giri

அதில் நேற்று முன் தினம் முத்துமணி தனது உறவினர்கள் இருவருடன் மது குடிப்பதற்காக கல்குவாரிக்கு சென்றுள்ளனர். அங்கு கால் தவறி பள்ளத்தில் விழுந்தாரா அல்லது யாரும் கொலை செய்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Krishna giri #22 years old man #body
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story