மருத்துவர் மற்றும் குடும்பத்தினரை கட்டி போட்டு 275 பவுன் நகை கொள்ளை.! அதிரவைக்கும் சம்பவம்.!
மருத்துவர் மற்றும் குடும்பத்தினரை கட்டி போட்டு 275 பவுன் நகை கொள்ளை.! அதிரவைக்கும் சம்பவம்.!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருவபவர் சக்திவேல். இவர் நாகனம்பட்டி அருகே அவரது வீட்டில் அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் நேற்று நள்ளிரவு தங்கள் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த வீட்டிற்குள் நுழைந்த கொள்ளை கும்பல் கத்தியை காட்டி டாக்டர் சக்திவேல், மனைவி ராணி மற்றும் குடும்பத்தினர் என 4 பேரை கட்டிப்போட்டனர். இதனையடுத்து அவரது வீட்டின் பீரோவில் இருந்த 25 லட்ச ரூபாய் பணம், 275 பவுன் நகையை அந்த கொள்ளை கும்பல் கொள்ளையடித்து சென்றனர்.
மேலும், மருத்துவர் சக்திவேல் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த அவருடைய காரையும் அந்த கும்பல் கொள்ளையடித்து சென்றது. இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மருத்துவர் மற்றும் அவரது குடும்பத்தினரை கட்டிப்போட்டு வீட்டில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.