#JustIN: அடுத்த 3 மணிநேரத்திற்கு., காஞ்சி, நாகை, மதுரை உட்பட 17 மாவட்டங்களில் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
#JustIN: அடுத்த 3 மணிநேரத்திற்கு., காஞ்சி, நாகை, மதுரை உட்பட 17 மாவட்டங்களில் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர் உட்பட 17 மாவட்டங்களில் மழைக்கான அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்று பின் வலுவிழந்தது. வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஒரு நாள் முழுவதும் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது அடுத்த சில மணிநேரத்தில் புயலாக வலுப்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெட் அலர்ட்
இந்நிலையில், இன்று புதுச்சேரி & காரைக்கால், தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #Breaking: செங்கல்பட்டு, கடலூர் உட்பட 5 மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட்; மக்களே ரெடியா இருங்க.!
அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை
இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணிவரையில் மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்ட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை போதைப்பொருள் கடத்தல் விவகாரம்., காவலரைத் தொடர்ந்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி கைது.!