பெட்டிக்கடையில் கைவரிசை காட்டிய மூன்று இளசுகள்.!!
பெட்டிக்கடையில் கைவரிசை காட்டிய மூன்று இளசுகள்.!!
மதுரையில் உள்ள சிந்துபட்டியை அடுத்த கட்டத்தேவன்பட்டி என்னும் ஊரில் வசித்து வருபவர் ராஜாங்கம். இவருக்கு வயது 46 . இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை ஒன்றை வைத்து வியாபாரம் நடத்தி வந்துள்ளார்.
இதில் சம்பவ தினத்தன்று வழக்கம் போல இரவு பெட்டிக்கடையை மூடிவிட்டு வீட்டிற்கு திரும்பி உள்ளார் ராஜாங்கம். அப்போது அவர் சென்ற பின்பு அங்க வந்த மர்ம நபர்கள் பெட்டிக்கடையை உடைத்து ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றுள்ளனர்.
பின்பு இது குறித்து காவல்துறையில் வியாபாரி ராஜாங்கம் புகார் தெரிவித்ததை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தியது.
அதில் பெட்டி கடையில் திருடியது அதே பகுதியில் வசித்து வரும் 25 வயதுடைய அஜித், 23 வயதுடைய விக்னேஷ் மற்றும் 21 வயதுடைய தினேஷ் என்று தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து காவல்துறை மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.