×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

3-"ஸ்டார்" பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவை .!!

3 star celebration..!!

Advertisement

கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி, பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு கட்டணத்துடன் கூடிய ரயில்களை தெற்கு ரயில்வே இயக்க உள்ளது. 
இதுதொடர்பாக தெற்கு ரெயில்வேயின் திருச்சி கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 



கோவையில் இருந்து வருகிற 19, 21, 24, 26, 28 மற்றும் 31-ம் தேதியும், ஜனவரி 2, 4, 7, 9, 11, 14, 16, 18-ம் தேதி ஆகிய நாட்கள் இரவு 10 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் (வண்டி எண்:06068) மறுநாள் காலை 9.15 மணிக்கு செங்கல்பட்டை சென்றடைகிறது. இந்த ரயில்கள் மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் படுக்கை வசதியுடன் கூடிய பெட்டி-2 மற்றும் 14 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். 


இதேபோல் நாகர்கோவிலில் இருந்து வருகிற 23 மற்றும் ஜனவரி 13-ம் தேதி ஆகிய 2 நாட்கள் மாலை 5.05 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் (வண்டி எண்:06064) மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தாம்பரத்தை சென்றடைகிறது. இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி மற்றும் வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 2 டயர் ஏ.சி.பெட்டி-1, 3 டயர் ஏ.சி.பெட்டி-3, படுக்கை வசதியுடன் கூடிய பெட்டி-13 மற்றும் 3 பொது வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

செங்கல்பட்டில் இருந்து திருச்சி வழியாக கோவைக்கு செல்லும் சிறப்பு கட்டண ரயில் (வண்டி எண்: 06067) வருகிற 20,22,25,27,29 மற்றும் ஜனவரி 1, 3, 5, 8, 10, 12, 15, 17 மற்றும் 19-ம் தேதி ஆகிய நாட்களில் புறப்பட்டு செல்கிறது. செங்கல்பட்டில் மாலை 6.30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 6.55 மணிக்கு கோவையை சென்றடைகிறது. 


இதேபோல் தாம்பரத்தில் இருந்து திருச்சி வழியாக நாகர்கோவில் செல்லும் சிறப்பு கட்டண ரயில் (வண்டி எண்: 06063) வருகிற 24, 31 மற்றும் ஜனவரி 14-ம் தேதி புறப்பட்டு செல்கிறது. தாம்பரத்தில் காலை 11.30 மணிக்கு புறப்படும் ரயில் நள்ளிரவு 12.30 மணிக்கு நாகர்கோவிலை சென்றடைகிறது 

 திருநெல்வேலியில் இருந்து வருகிற 20, 27 மற்றும் ஜனவரி 3,10 ஆகிய 4 நாட்கள் இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் (வண்டி எண்: 06062) மறுநாள் காலை 10.45 மணிக்கு செங்கல்பட்டை சென்றடைகிறது. இந்த ரயில்கள் மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், கீழ கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 2 டயர் ஏ.சி. பெட்டி-1, 3 டயர் ஏ.சி.பெட்டி-3, படுக்கை வசதியுடன் கூடிய பெட்டி-9 மற்றும் 6 பொது வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். 

இதேபோல் செங்கல்பட்டில் இருந்து திருச்சி வழியாக திருநெல்வேலி செல்லும் சிறப்பு கட்டண ரயில் (வண்டி எண்:06061) வருகிற 28 மற்றும் ஜனவரி 4-ம் தேதி புறப்பட்டு செல்கிறது. செங்கல்பட்டில் இரவு 7.45 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 10.30 மணிக்கு திருநெல்வேலியை சென்றடைகிறது.


இதுதவிர நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்துக்கு சுவேதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் (வண்டி எண்: 82646) நாகர்கோவிலில் வருகிற 30-ம் தேதி மாலை 5.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் 2 டயர் ஏ.சி. பெட்டி-1, 3 டயர் ஏ.சி.பெட்டி-3, படுக்கை வசதியுடன் கூடிய பெட்டி-13 மற்றும் 3 பொது வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ..

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#mathulai #thanajavur #trichy #tamil news #tamil cinema #tamil nadu #Tamil news updates #tamil
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story