×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிஸ்கட்டை, டீயில் நனைத்து சாப்பிட்ட 3 வயது பிஞ்சு துடி துடித்து பலி.! என்ன நடந்தது.?!

பிஸ்கட்டை, டீயில் நனைத்து சாப்பிட்ட 3 வயது பிஞ்சு துடி துடித்து பலி.! என்ன நடந்தது.?!

Advertisement

டீயில், பிஸ்கட் நனைத்து சாப்பிட்ட குழந்தை

கும்முடிபூண்டி அருகே கண்டிகை கிராமத்தில் ஹரி கிருஷ்ணன், அமுலு தம்பதிக்கு 3 வயதில் பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. வெங்கட லட்சுமி என்ற அந்த குழந்தை நேற்று காலை தேநீர் மற்றும் பிஸ்கட் சாப்பிட்டுள்ளது. இதனை தாய் அமுலு தான் குழந்தைக்கு ஊட்டியுள்ளார். இதை சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தை வெங்கடலட்சுமிக்கு திடீரென புரையேறி மூச்சு திணறல் வந்தது.

சிகிச்சைக்கு முன்பே மரணம்

குழந்தையின் நிலைமையை கண்டு பயந்து போன தாய் அந்த குழந்தையை உடனடியாக செங்குன்றம் பகுதியில் இருந்த தனியார் மருத்துவமனை ஒன்றில் கொண்டு சென்று சேர்த்தார். அங்கு மருத்துவர்கள் விரைவாக குழந்தைக்கு சிகிச்சைகளை மேற்கொள்ள பரிசோதனை செய்தனர்.

இதையும் படிங்க: "குடி குடியை கெடுக்கும்.." போதையால் சீரழிந்த குடும்பம்.!! புதுமண தம்பதி தற்கொலை.!!

ஆனால், அவர்கள் சிகிச்சை மேற்கொள்வதற்கு முன்பாகவே குழந்தை உயிரிழந்து விட்டது என்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இந்த தகவலை தாய் அமுலுவிடம் கூறிய போது அவர் தலையில் அடித்துக் கொண்டு கதறி கதறி அழுத்துள்ளார்.

கதறும் பெற்றோர்

இது அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி மருத்துவமனை மூலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "இனி குடிச்சிட்டு வருவ.." போதையில் உறங்கிய கணவனுக்கு கொதிக்கும் எண்ணெயில் அபிஷேகம்.!! மனைவி கைது.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tea #Biscuit #Kummidipoondi
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story