வாவ்... செம க்யூட் டான்ஸ்... மல்லிப்பூ பாடலுக்கு குளியலறையில் குத்தாட்டம் போட்ட குழந்தை... வைரல் வீடியோ!!
வாவ்... செம க்யூட் டான்ஸ்... மல்லிப்பூ பாடலுக்கு குளியலறையில் குத்தாட்டம் போட்ட குழந்தை... வைரல் வீடியோ!!
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடல் பட்டிதொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மல்லிப்பூ பாடலை பிரபலங்கள் மட்டுமின்றி சாதாரண மக்களும் பாடி, நடித்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இப்பாடல் சிறிய பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில் தற்போது மூன்று வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்று குளியலறையில் குளிக்கும் போது பின்னால் ஒளிக்கும் மல்லிப்பூ பாடலை கேட்டு ரசித்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் மழலை தனமான நடனம் ஆடி அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. அந்த வீடியோ இணையத்தில் வெகுவாக பரவி வருகிறது. அந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் தங்களது லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.