சிவப்பு நிற சுடிதார்..! பாதி எறிந்த நிலையில் இளம் பெண்! அருகில் கிடந்த பொருட்கள்!
32 years old girl burned in pudukkottai viralimalai
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பாதி எறிந்த நிலையில் இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை அடுத்து கலிங்கி என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் பாதி எறிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பாதி எறிந்த நிலையில் இருந்த 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலத்தை மீட்டனர். அந்த பெண்ணின் அருகில் மண்ணெண்ணெய் கேன், செருப்பு, தோடு ஆகிய பொருட்டுகளையும் மீட்டுள்னனர்.
இறந்து கிடந்த பெண் யார், கொலை செய்யப்பட்டாரா, தற்கொலையா என போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள CCTV காட்சிகளை போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.