×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கள்ளக்காதல் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த 4 வயது மகன்!! கதற கதற அடித்தே கொன்ற மனித மிருகங்கள்!!

4 year boy killed by mother

Advertisement

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு ஹரிஷ் என்ற 4வயது மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த இரு வருடங்களுக்கு முன்பு கருத்துவேறுபாடு காரணமாக முருகனும், கீதாவும் பிரிந்து விட்டனர். 

இந்நிலையில் கீதா உதயகுமார் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர்களுக்கு ஒரு வயது பெண் குழந்தை உள்ளது. மேலும் ஹரிஷ் கீதாவின் தாய் வீட்டில் வசித்து வந்த நிலையில் அவரது வீட்டிற்கு அருகிலேயே கீதா வசித்து வந்துள்ளார்.

அதனால் குழந்தை ஹரிஷ் தனது தாய் வீட்டிற்கு அடிக்கடி செல்வதும் அங்கேயே தங்குவதுமாக இருந்து வந்துள்ளான். இந்நிலையில் கீதாவின் தங்கை புவனேஸ்வரி என்பவருக்கு ஆட்டோ ஓட்டுனர் கார்த்திக் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து கார்த்திக் கீதாவுடனும், புவனேஸ்வரி அக்கா கணவர் உதயகுமாருடனும் தனிமையில் இருந்து வந்துள்ளனர்.

 இதனை ஹரிஷ் கண்ட நிலையில் அவர்களது கள்ளக்காதலை ஹரிஷ் வெளியே சொல்லிவிடுவான் என அவனுக்கு சாப்பாடு கொடுக்காமல் அவரை கொடுமைபடுத்தி வந்துள்ளனர். மேலும் தாங்கள் உல்லாசமாக இருப்பதற்கு ஹரிஷ் இடையூறாக இருந்தநிலையில் கீதா, தனது  தங்கை மற்றும் அவரது கணவருடன் இணைந்து ஹரிஷை  கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இரவு 8 மணி போல ஹரிஷிற்கு பிஸ்கட் வாங்கி கொடுத்து வெளியே அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அங்குள்ள மயானத்திற்கு அழைத்துச் சென்று ஹரிஷின் கழுத்தில் குத்தியும், பின்னர் சிறுவனின் கழுத்தை கத்தியால் அறுத்தும் கொலை செய்துள்ளனர். பின்னர் ஒன்றும் தெரியாதது போல் அவரவர் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

பின்னர் மறுநாள் தனது மகனை காணவில்லை என பதறியபடி போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசார்  தீவிர தேடுதலில் ஈடுபட்ட நிலையில் சிறுவன் ஹரீஸ் மயானத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சிதையுண்டு கிடந்துள்ளார்.

பின்னர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கீதா உதயகுமார் மற்றும் புவனேஸ்வரி கார்த்திக் ஆகியோர் குழந்தையை விருதுநகர் கொன்றது அம்பலமானது. அதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Murder #harish #mother
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story