தி.மு.க பிரமுகர் கொலை வழக்கு: பெண் தாதா லோகம்மாள் உட்பட 5 பேர் கோர்ட்டில் சரண்..!
தி.மு.க பிரமுகர் கொலை வழக்கு: பெண் தாதா லோகம்மாள் உட்பட 5 பேர் கோர்ட்டில் சரண்..!
சென்னை, தாம்பரம் பகுதியில் உள்ள எட்டியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சதீஷ். இவர் அந்த பகுதி தி.மு.க பிரமுகர். அதே பகுதியை சேர்ந்தவர் லோகம்மாள். இவர் பெண் ரவுடி. சதீஷ் மற்றும் லோகம்மாள் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ரவுடி லோகம்மாள் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தி.மு.க பிரமுகர் சதீஷை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த சதிஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று சதீஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரவுடி லோகம்மாளை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில், தி.மு.க பிரமுகர் கொலை வழக்கில் லோகேஸ்வரி உட்பட ஐந்து பேர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். நவமணி ,சதீஷ், அன்பு, ராஜேஷ் மற்றும் லோகேஸ்வரி ஆகிய ஐந்து பேரும் இன்று காலை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.