×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரூ.5 மட்டும் கட்டணம் பெற்று மருத்துவம் பார்த்த டாக்டர் காலமானார்! கலங்கி நிற்கும் வடசென்னை மக்கள்! இரங்கல் தெரிவித்த ஓபிஎஸ்!

5 rs doctor thiruvengadam passed away

Advertisement

வடசென்னையில் ரூ.5 மட்டும் கட்டணம் பெற்று மருத்துவ பணி செய்துவந்த மருத்துவர் திருவேங்கடம் (70) காலமானார். வியாசர்பாடியில் பல்லாண்டு காலம் ரூ.2 கட்டணம் வசூலித்து மருத்துவம் பார்த்து, பின்பு வெறும் ரூ.5 மட்டும் உயர்த்தி பலருக்கும் சிகிச்சை அளித்து வந்தவர் மருத்துவர் திருவேங்கடம் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மறைவு செய்தி வடசென்னை பகுதி மக்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நாற்பது ஆண்டு காலம் ஏழைகளிடம் 5 ரூபாய்க்கு அதிகமாக கட்டணம் வாங்காமல் சேவையாற்றி வந்த மருத்துவர் திருவேங்கடத்தின் சேவை தமிழக மக்களையே பிரமிக்க வைக்கிறது.

இவரது மரணச்செய்தி அறிந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "1973ஆண்டில் 2ரூபாயில் தொடங்கி அண்மையில் 5ரூபாயில் ஏழை எளியோருக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை    அளித்து வந்த வடசென்னை மருத்துவர் திருவேங்கடம் அவர்கள் காலமான செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. இம்மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனங்களில் என்றும் வாழும் மருத்துவருக்கு எனது இதய அஞ்சலி" என தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#5 rs doctor #North chennai #ops
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story