12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது நபர் கைது.!
12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது நபர் கைது.!
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியை சேர்ந்ந 50 வயதான ரெவி என்பவர் மரப்பட்டறை வைத்து தச்சு தொழில் செய்து வருகிறார். என்ன நிலையில் பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கடன் சில நாட்களாக அவருடைய வீட்டின் அருகே வசித்து வந்துள்ளனர்.
இந்தக் குடும்பத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுவன் அந்த பகுதியில் உள்ள கடைக்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க செல்வது வழக்கம். அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி மாலை வழக்கம் போல் சிறுவன் கடைக்கு சென்று உள்ளான்.
அப்போது அந்த நபர் சிறுவனிடம் ஏதோ கூறி அருகில் உள்ள காலிகட்டியதற்கு அழைத்துச் செல்லுள்ளார். அங்கு சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து சிறுவனின் தாய் குளைச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ரெவியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.