ப்பா.. இவ்வளவு பாசமா.! காணாமல் போன கிளிக்காக தம்பதியினர் செய்த வேற லெவல் காரியம்! நெகிழ்ச்சி சம்பவம்!!
ப்பா.. இவ்வளவு பாசமா.! காணாமல் போன கிளிக்காக தம்பதியினர் செய்த காரியம்! நெகிழ்ச்சி சம்பவம்!!
காணாமல் போன தங்களது கிளியை தேடி தருவோருக்கு 50 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என தம்பதியினர் நடித்துள்ள போஸ்டர் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
கர்நாடகா துமகூரில் உள்ள ஜெயநகர் பகுதியை சேர்ந்தவர்கள் அர்ஜுன்- ரஞ்சனா தம்பதியினர். அவர்கள் ஆப்பிரிக்கன் வகையைச் சேர்ந்த ஜோடி கிளியை கடந்த 3 வருடங்களாக அளவுகடந்த பாசத்துடன் வளர்த்து வந்துள்ளனர். மேலும் ஆண்டுதோறும் இந்த கிளிகளுக்கு கோலாகலமாக பிறந்தநாள் விழா நடத்தி வந்துள்ளனர்
இந்த நிலையில் அதில் ஆண் கிளியான ருஸ்துமா, கடந்த 16ஆம் தேதி திடீரென காணாமல் போயயுள்ளது. மேலும் பல இடங்களில் தேடியும் அந்த கிளியை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அந்த கிளி திரும்பி வராததால் அந்த தம்பதியினர் சாப்பிடாமல் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். கிளியை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டுமென தீவிரம் காட்டி வருகின்றனர்.
மேலும் அவர்கள் ருஸ்துமா கிளியின் புகைப்படத்தை போட்டு போஸ்டர் அடித்துள்ளனர். அதில் காணாமல் போன தங்களது கிளியை கண்டுபிடித்துக் கொடுத்தால் அந்த இடத்திலேயே அவர்களுக்கு ரூ 50000 சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை, பால்கனிகள், மொட்டை மாடிகள் மற்றும் மரங்களின் கிளைகளில் கண்காணிக்குமாறும் வேண்டிக் கேட்டுக் கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.