அடிசக்க.. அசத்தல் அறிவிப்பு..! 6 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கம்..!
அடிசக்க.. அசத்தல் அறிவிப்பு..! 6 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கம்..!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்ரா பௌர்ணமி விழாவானது 2 வருடத்திற்கு பின்னர் சிறப்பிக்கப்படுகிறது. இதனால் 20 இலட்சம் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022 சித்ரா பௌர்ணமி 16 ஆம் தேதி அதிகாலை 02:33 முதல் 17 ஆம் தேதி அதிகாலை 01:16 வரை ஆகும்.
இதனையடுத்து, சித்ரா பௌர்ணமிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் நிலையில், கிரிவலப்பாதை தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது. இதனை மேற்பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் முருகேஷ் சித்ரா செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "சித்ரா பௌர்ணமியை தொடர்ந்து திருவண்ணாமலைக்கு 25 இலட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. பக்தர்களின் தரிசனத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தற்காலிகமாக 9 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும். பக்தர்கள் வசதிக்காக மருத்துவ முகாம், மின்சார வசதி, குடிநீர் வசதி உட்பட அனைத்து அடிப்படை வசதியும் ஏற்படுத்தப்படும்.
பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்குவதற்கு 40 இடங்கள் தேர்வுகள் செய்யப்பட்டுள்ளன. 70 நிறுவனம் முன்பதிவு செய்துள்ளது. அன்னதானம் செய்ய விரும்பும் மக்கள் https://foscos.fssai.gov.in என இணையத்தில் 14 ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். கிரிவலம் வருபவர்களுக்கு என சென்னை, வேலூர், விழுப்புரம், சேலம், பாண்டிச்சேரி, மதுரை, காஞ்சிபுரம், திருச்சி, கோவை, பெங்களூரில் இருந்து 6 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இரயில் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.